Posts

Showing posts from August, 2010

எங்கள் வீடு!

எத்தனை நாள் ஏங்கியிருப்போம் சொந்த வீடு வேண்டுமென? அத்தனையும் நனவானது ஒரு வீடு நாம் கட்டிய போது! ஒவ்வொரு செங்கல்லும் சொல்லியது இது நம் வீடு என! ஒவ்வொரு அறையாக எழுந்த போது சிறு வயதில் நாம் வீடு கட்டி விளையாடியது நினைவில் எழுகிறது! எவ்வளவு ஆரவாரத்துடன் ரசித்து விளையாடினோம் அதைப் போலவே ரசித்து ரசித்து கட்டினோம் புது வீட்டை! அந்நாட்களில் நெஞ்சினில் நிறைந்திருந்த மகிழ்ச்சியை இவ்வீடு எப்போதும் கொண்டிருக்குமென மனக்கோட்டைக் கட்டினோம்! யார் கண் பட்டதோ தெரியவில்லை! ஓங்கி வளர்ந்த மரத்தின் ஒவ்வொரு கிளைகளாய் வெட்டி வீழ்த்தியதை போல் ஒவ்வொரு உறவாக ஏதேதோ காரணங்களுக்காக பிரிந்து கொண்டே இருக்கிறது! மாலையில் உறையும் கூடுகளைப் போல் இருந்திருக்க வேண்டிய அவ்வீடு கண்டஞ்சும் சிறைக் கூண்டுகளாய் மாறிய கோலமென்ன? ஒரு நாளில் அதை விற்று காசாக்கி சொத்தைப் பிரிக்கும் நிலை வந்த போது சிறு வயதில் கட்டிய வீட்டை இடித்த போது கனத்த இதயத்தைப் போல, உயிர் என்னை பிரிந்த கணத்தை உணர்ந்ததைப் போல துக்கம் தொண்டையை அடைத்தது! மாற்றம் நிறைந்த உலகில் மாறாதது மன

பச்சை துரோகம்

நீர்த்து விட்டது கண்களில் நீர்வரத்து! தகர்ந்து விட்டது நம்பிக்கை! நாங்களும் சுதந்திர காற்றை சுவாசிப்போம் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டது! பச்சை துரோகம் செய்த உலக நாடுகளை விட பச்சை தமிழர் கள் துரோகம் செய்து விடவில்லை! எங்கள் பொருட்டு தங்கள் உயிரை துச்சமென எண்ணி போராட்ட உணர்வைத் தூண்ட தங்கள் இன்னுயரை துறந்தார்கள்! எந்த நோக்கத்துக்காக தங்கள் இன்னுயிர் ஈந்தர்களோ அந்த எழுச்சி நிச்சயமாய் எழுந்தது! தமிழ் உணர்வாளர்கள் துடித்தெழுந்தர்கள்! அங்கேயும் கொடுமை அரங்கேறியது! அரசியல் சாயம் பூச முயன்ற கட்சிகளின் வெளி வேசத்தால் எழுச்சியும் புஷ்வாணமானது! தமிழன் என்றொரு இனமுண்டு! அதை அழிக்க தனி இனம் தேவையில்லை தமிழரே போதுமானது என்று முதுகில் குத்திய கட்சிகள் அரங்கேறிய வேளை அது! ஆக்க பூர்வ அரசியலால் தீர்வு உண்டு! ஆதாய பூர்வ அரசியலிடம் தீர்வு எதிர் பார்ப்பது மடமையல்லவா?

எங்கள் வலி!

எங்கள் வலி! ஒரு இனம் அழிக்கப்படுகிறது ஒரேயடியாய்! கருவுற்றா குழந்தைகளும் கலைக்கப்படுகிறார்கள்! ஒன்றும் தராமல் ஒருபக்கம் பட்டினியாய் வைத்து விட்டு எல்லாம் தந்து விட்டதாய் நாடகம் ஆடப்படுகிறது! பட்டினியால் உயிர் விட்டோர் எத்தனையோ பேர்! சித்ரவதையால் உயிர் விட்டோர் எத்தனையோ பேர்! தமிழ்மண் முழுவதும் சிங்கள மயமாகிறது! பல்கலை கழகங்கள் சிங்கள மயமாகிறது! தமிழ்பெண்ணின் கற்பு அமங்கல மாகிறது! பல்வகை சித்ரவதைகள் எங்கள தாகிறது! உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க வீடும் வாழ இடமும் வேண்டுவது எங்கள் உரிமை! தன்னை உயர்ந்தவர் என்றெண்ணி தரணியின் எதிர்ப்பையும் விஞ்சி எம்மை அடிமை படுத்தியது கொடுமையிலும் கொடுமை! சமமாய் எங்களை மதியாதவரிடம் எங்கள் உரிமைக்காக போராடியதில் என்ன தப்பு உள்ளது? எங்கள் உரிமைக்காக போராடியதில் பண்புமிகு பாரத தேசமும் வம்புமிகு சீன தேசமும் கைகோர்த்து சிங்களரோடு எம்மை எதிர்த்த போதும் எங்களவர்கள் யாரும் பயந்ததில்லை! களத்தை விட்டு ஓடவில்லை! கடைசி மூச்சையும் களத்தில் தானே விட்டார்கள்!

அதிதி தேவோ பவ

நான் கடந்த வாரம் "மதராசபட்டினம்" திரைப்படம் பார்த்தேன். மிக மிக அருமையான படம் அது! சென்னை நகரின் பழமையை மிக அழகாக எடுத்திருந்தார்கள். அதே சமயம், நம் நாட்டில் வெளி நாட்டினரை எப்படி நடத்துகிறோம் என்று தெளிவாக காட்டியிருகிறர்கள். வெளி நாட்டினரை எப்படி எல்லாம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என்று கேவலமாக செயல்படும் நம் நாட்டின் இன்றைய நிலையை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இது போன்ற படங்களை பார்த்தாவது நம்மவர்கள் திருந்துவார்களா? 

அனைவருக்கும் வணக்கம்

கடந்த ஒரு வாரமாக எனக்கு பணி பளு அதிகமாக இருந்தது! எனவே இங்கே வர இயலவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் நான் கேட்ட செய்தி என்னை அதிர்சிக்குள்ளக்கியது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டு இருந்திருந்தார்கள் மனித நேயம் இறந்து போய் விட்டதா? ஓ! கடவுளே!

செல்வாவின் சிந்தனைகள்

என் அருமை தமிழினமே!  உங்கள் முன் புதிதாய் பிறந்துள்ளேன் ! எனக்கு உங்கள் ஆதரவு தேவை!