Posts

Showing posts from 2011

நிலையாகுமோ வாழ்க்கை!

நித்தம் அமுது படைத்தது         ஊட்டினாள் அன்னை! நிலாவைப் பற்றியும் எடுத்து         இயம்பினார் தந்தை! நீலவான இரகசியத்தை         எடுத்துரைத்தார் குரு! நீலவானமும் எடுத்துரைத்துக்         கொண்டே இருக்கிறது             நித்தியப் பொருள் எது என்று! நீ தேடுவது நித்தமும்         நிலைத்த இன்பமா? நிமிடத்தில் முடிந்து          போகும் இன்பமா? நீ எங்கிருந்து வந்தாய்? நீ எங்கே போகப் போகிறாய்? நீ தேடுவது நீண்ட இன்பம்           தரும் நல்லதையா? நீ அனுபவித்தே தீர்க்க வேண்டிய            துன்பம் தரும் தீயதையா? நினது துன்பங்களுக்கும்            துயரங்களுக்கும் நீயே பொறுப்பு! நிலையில்லா இவ்வுலகில்           நீ யார் என்பதை நிச்சயிக்கும் திறமை           உன்னிடத்திலேயே இருக்கிறது! நிலைத்த பரம் பொருளை           படைத்தவனிடம் நீ செல்லும் காலம்           நினது முயற்சியிலேயே உள்ளது!  

பிரியமான தோழியே!

நிதம் நிதம் உன்னோடு         பேசிக் களித்திருக்கிறேன்! இதம் இதமான சொற்கள்         உன் இதழ்களிலிருந்து வெளிப்பட            நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்! அதனாலேயே என் உள்நாட்டில் உன் குரலோசையே தேசியகீதம்! உன் இதழ்களே அரசுசின்னம் உன் நினைவே கொண்டாடும் மதம் உன் பணப்பையே என் கஜானா!                        நீ வரும்போது தான் எந்நாட்டில் வசந்தகாலம்! நீ என்னருகில் இல்லாத் தருணங்கள் கோடைக்காலம்! நீ சிரிப்பதைக் கண்டால் எந்நாட்டில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன!