எங்கள் வீடு!
எத்தனை நாள் ஏங்கியிருப்போம் சொந்த வீடு வேண்டுமென? அத்தனையும் நனவானது ஒரு வீடு நாம் கட்டிய போது! ஒவ்வொரு செங்கல்லும் சொல்லியது இது நம் வீடு என! ஒவ்வொரு அறையாக எழுந்த போது சிறு வயதில் நாம் வீடு கட்டி விளையாடியது நினைவில் எழுகிறது! எவ்வளவு ஆரவாரத்துடன் ரசித்து விளையாடினோம் அதைப் போலவே ரசித்து ரசித்து கட்டினோம் புது வீட்டை! அந்நாட்களில் நெஞ்சினில் நிறைந்திருந்த மகிழ்ச்சியை இவ்வீடு எப்போதும் கொண்டிருக்குமென மனக்கோட்டைக் கட்டினோம்! யார் கண் பட்டதோ தெரியவில்லை! ஓங்கி வளர்ந்த மரத்தின் ஒவ்வொரு கிளைகளாய் வெட்டி வீழ்த்தியதை போல் ஒவ்வொரு உறவாக ஏதேதோ காரணங்களுக்காக பிரிந்து கொண்டே இருக்கிறது! மாலையில் உறையும் கூடுகளைப் போல் இருந்திருக்க வேண்டிய அவ்வீடு கண்டஞ்சும் சிறைக் கூண்டுகளாய் மாறிய கோலமென்ன? ஒரு நாளில் அதை விற்று காசாக்கி சொத்தைப் பிரிக்கும் நிலை வந்த போது சிறு வயதில் கட்டிய வீட்டை இடித்த போது கனத்த இதயத்தைப் போல, உயிர் என்னை பிரிந்த கணத்தை உணர்ந்ததைப் போல துக்கம் தொண்டையை அடைத்தது! மாற்றம் நிறைந்த உலகில் மா...