எந்திரன் - ஓர் திருப்புமுனை!

எனதருமை தமிழ் மக்களே! தமிழ் சினிமாவிலே ஒரு புது முயற்சியாக எந்திரன் திரைப்படம் வித்தியாசமாகவும் முதன்மை முயற்சியாகவும் எடுக்கப் பட்டுள்ளது! பெரும்பாலும் எல்லா இணைய தளங்களிலுமே எந்திரன் குறித்த விமர்சனம் வெளியாகி விட்ட போதிலும் நான் உணர்ந்த சில விசயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக நான் சொல்ல விரும்புவது ரஜினியின் துவக்க காட்சி! எல்லா படங்களிலுமே பெரும் படாடோபங்களோடு அறிமுகமாகிற ரஜினி, இப்படத்திலே மிகவும் எளிமையாக அறிமுகமாகிற காட்சி தமிழ் சினிமாவிற்கு புதிது. ஆங்கிலப் படங்களில் தான் இவ்வாறு எளிமையாக, சாதரணமாக அறிமுகப்படுத்துவார்கள். தமிழ் சினிமா உலக தரத்திற்கு உயர்ந்து வருவதற்கு இது ஓர் உதாரணம்.

இரண்டாவதாக நான் கூறவிரும்புவது, ரோபோட் பற்றி தான். சாதாரண பொம்மையை வைத்து படமெடுத்து இருப்பார்கள் என்று தான் நினைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றேன் ஆனால் நிஜமான ரோபோவையே நடிக்க வைத்தது போல சிறப்பாக எடுக்கப் பட்டிருந்தது. தமிழ் சினிமா இன்னொரு தளத்திற்கு உயர்ந்திருப்பதற்கு இதுவே ஓர் சாட்சி.

மூன்றாவதாக சொல்லவேண்டியது பாடல்களைப் பற்றி. உலக மார்க்கெட்டை மனதில் கொண்டு பாடல்கள் உருவாக்கப் பட்டுள்ளது.

நான்காவதாக கூறவேண்டியது கிராபிக் காட்சிகளைப் பற்றி. தமிழ் சினிமாவிலே கிராபிக் காட்சிகளுக்காக அதிகம் மெனக்கெட்டிருப்பது இந்த படத்தில் தான் என்று நினைக்கிறேன். ஒரு ரஜினியின் அட்டகாசத்தையே தங்க முடியாது. இதிலோ நூறு ரஜினிகள்! இருந்தாலும் கிராபிக் காட்சிகள் அதிகமானதால் ஓர் அயர்ச்சி பார்க்கும் போது ஏற்படுகிறது.

என்ன தான் அருமையாக எடுத்திருந்தாலும் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக ரோபோவை வெட்டி வீசும் ஓர் விஞ்ஞானிக்கு ரோபோவின் ரகசிய தகவலை அழிக்க தோன்றாதது ஏன்? சினிமாவில் லாஜிக் பார்க்க கூடாது என்பதற்கு இது ஓர் உதாரணம். இருந்தாலும் இது ஒரு புதுமையான முயற்சி என்பதனாலே வரவேற்போம். ஆனால் படம் வெளியான முதல் நாளே இணையத்தில்(www.tamilkeys.com) முழுப்படமும் வெளியானது முற்றிலும் முறையற்ற செயல். பலரது உழைப்பில் உருவான ஓர் படத்தை இங்ஙனம் வெளி விடுவது அவர்களது உழைப்பை திருடுவதற்கு சமம்.

Comments

Popular posts from this blog

எங்கள் வீடு!

ஆக்கப் பூர்வ தீர்வு!