இது நாடா இல்லை சுடுகாடா!
இது நாடா இல்லை சுடுகாடா! அண்மை கால அரசியல் நிகழ்வுகளைக் காணும் பொழுது என்னடா இது நாடா இல்லை எமலோகமா என்ற சந்தேகம் என்னுள் வலுவாக தோன்றுகிறது. மக்கள் நல அரசமைப்போம் என்று கூறி அரசை அமைத்து விட்டு மக்கள் கால காலமாக பெற்று வந்த சலுகைகளை ரத்து செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்கிறார்கள். இணைத்த உடன் அனைத்தையும் ரத்து செய்கிறார்கள். ஆதார் எண் குறித்து அரசின் நோக்கம் தான் என்ன என்று தெளிவுபடுத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும் . தமிழக தலைவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் . இதுவரை காணாத அளவு தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் துரோகம் இழைக்கப் படுகிறது. அதை எல்லாம் கண்டும் காணாமல் இருக்க ஒருவேளை கையூட்டு பெற்று விட்டார்களோ என்னவோ. நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்களுக்கு பெரும் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு என்ன பாட திட்டத்தில் கற்பிக்கப்பட்டதோ அதை தானே அவர்கள் படித்தார்கள். நீட் தேர்வை அமல்படுத்தும் கொள்கை முடிவை அரசு எடுத்த போதே அதற்கேற்ற பாட திட்டத்தினை கற்பித்து மாணவர்களை தயார் செய்ய வேண்டியது அரசின் கடமை அல்லவா. அதை செய்யாமல் திடீரென அமல்ப...