நிலையாகுமோ வாழ்க்கை!
நித்தம் அமுது படைத்தது ஊட்டினாள் அன்னை! நிலாவைப் பற்றியும் எடுத்து இயம்பினார் தந்தை! நீலவான இரகசியத்தை எடுத்துரைத்தார் குரு! நீலவானமும் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கிறது நித்தியப் பொருள் எது என்று! நீ தேடுவது நித்தமும் நிலைத்த இன்பமா? நிமிடத்தில் முடிந்து போகும் இன்பமா? நீ எங்கிருந்து வந்தாய்? நீ எங்கே போகப் போகிறாய்? நீ தேடுவது நீண்ட இன்பம் தரும் நல்லதையா? நீ அனுபவித்தே தீர்க்க வேண்டிய துன்பம் தரும் தீயதையா? நினது துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் நீயே பொறுப்பு! நிலையில்லா இவ்வுலகில...